நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சைகை மொழியில் அஞ்சலி...

துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில்  நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் சைகை மொழியில் அஞ்சலி  மற்றும் பிரார்த்தனை செய்தனர்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சைகை மொழியில் அஞ்சலி...

தஞ்சாவூர் | துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | 8 குண்டுகள் முழங்க அரசு மரியாதை...வாணி ஜெயராம் உடல் தகனம்...முதலமைச்சர் அறிவிப்பு!

இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் தஞ்சாவூர் பொதுமக்கள் சார்பில் தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உயிரிழந்தவர்களுக்குசைகை மொழியில் அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வரவும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | கரிநாளான சுதந்திர தினநாள்...... பேரணியாக திரண்ட மாணவர்கள்!!