பிறந்தது விடிவுகாலம்...! வீடுகளின்றி வாழ்ந்து வரும் பழங்குடியினர்...!

பிறந்தது விடிவுகாலம்...! வீடுகளின்றி வாழ்ந்து வரும் பழங்குடியினர்...!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, குறவன் குளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் பழங்குடி இனத்தை சேர்ந்த  37 குடும்பங்கள்  வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக  அரசால் வீட்டுமனை பட்டா எதுவும் வழங்காத நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள  வனப்பகுதியில் குகைகள், பாறை இடுக்குகள் மற்றும் வனப்பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். 

எனவே பழங்குடியின மலைவாழ் மக்கள், தொடர்ந்து குடி இருக்க வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது பெரியகுளம் அருகே உள்ள சோற்றுப்பாறை அணைக்கு மேல் பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை தேர்வு செய்து அதில் பழங்குடியினத்தை சேர்ந்த 37 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பழங்குடியின மலைவாழ் மக்கள், வீடின்றி வாழ்ந்து வரும் தங்களுக்கு இந்த இடத்தை தேர்வு செய்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதோடு தங்களின் குழந்தைகள் இனிமேலாவது கல்வி கற்று தங்களின் வாழ்க்கை தரம் உயரும் என நம்பியுள்ளதாகவும் இந்த இடத்தில் அரசு விரைவாக வீடு கட்டி தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க : கோவை சம்பவம் எதிரொலி...! திருவண்ணாமலை கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு...!