திடீரென பரவிய காட்டுத் தீயால் கருகிய மரங்கள்...

குன்னூர் அருகே வனப்பகுதிகளில் பற்றி எரிந்த காட்டுத் தீயால் 5 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகியது.
திடீரென பரவிய காட்டுத் தீயால் கருகிய மரங்கள்...
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவு நேரங்களில் குளிரும் நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியால் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமம் மற்றும் ஜெ. கொலக்கம்பை கிராமத்திற்கு இடையே உள்ள வனபகுதியில் இரவில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. கீழ்பகுதியிலிருந்து மேல்பகுதி வரை விட்டு விட்டு எரிந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதி மக்கள் தீயனைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர் ஆனால் தீயணைப்புத்துறை வாகனங்கள் அப்பகுதிக்கு செல்ல இயலாததால்  சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் தீயில் கருகியது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த காட்டுத் தீ கொஞ்சம் கொஞ்சமாக அனைந்தது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com