பொங்கலுக்கு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்...

பொங்கல் விடுமுறை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள், ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

பொங்கலுக்கு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்...

கன்னியாகுமரி | பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பள்ளி- கல்லூரிகளில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் . குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் அருவிப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழா... கூட்டம் கூட்டமாக குவிந்த பொது மக்கள்...

அதுபோல அருவியில் கொட்டும் மிதமான நீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் நீராடுவது மட்டுமல்லாமல் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடியும் சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் தொடர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

அருவியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா படகு துறையிலும் படகு சவாரி செய்து இயற்கையின் அழகையும் ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஆண் ,பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஒட்டஞ்சத்திரத்தில் ஒட்டகப்பால்.. செல்ஃபியுடன் குஷியில் குதிக்கும் சுற்றுலா பயணிகள்...