அலையாத்திக்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை...

முத்துப்பேட்டை பகுதியில் காற்று அதிகமாக வீசுவதால் அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை விதித்து வனத்துறை தகவலளித்துள்ளது.

அலையாத்திக்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை...

திருவாரூர் | முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூராவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.

காவேரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.

மேலும் படிக்க | பார்வையாளர்களை பயத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டுசெல்ல வருகிறது லேடி சூப்பர்ஸ்டாரின் கனெக்ட்..!

அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும்,வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த கடந்த 9ந்தேதி முதல் 18ந்தேதி வரை மாண்டஸ் புயல் எதிரொலியாக அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை செய்து இருந்தது. பின்னர் கடந்த 19ந்தேதி மீண்டும் அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா அனுமதி வழங்கியது. இதனால் முதல் நாள் முதல் சுற்றுல்லா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

இந்தநிலையில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சுற்றுப்பகுதியில் உள்ள மேகங்கள் தமிழக கடலோரத்தில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை நீண்டு நிலை கொள்ளும் எனவே தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | சிரிக்கக் கூடாது..! அழுங்க ஆனா சத்தம் வரக்கூடாது..! பகிரங்க எச்சரிக்கை விடுத்த குழந்தசாமி..!

இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கல் கடல் பகுதியில் 45கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் முத்துப்பேட்டை பகுதியில் அதிகளவில் காற்று வீசி வருவதால் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று ஒரு நாள் வனத்துறை தடை விதித்து அறிவித்துள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் யாத்திரை... ரவீந்தர் ரெட்டி சொன்னது என்ன?