ஓசூரம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்...

பள்ளிப்பட்டு அருகே அருள்மிகு ஓசூரம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஓசூரம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்...

திருவள்ளூர் | பள்ளிப்பட்டு பகுதியில் பெருமாநல்லூர் கொசஸ்தலை ஆற்றின் அருகில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான சிறப்பு பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய  திருப்பணிகள் நிறைவு பெற்று புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை யொட்டி திருக்கோயில் முழுவதும் வண்ணமலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் ஹோம குண்ட பூஜைகள் செய்தனர்.

மேலும் படிக்க | 16 ஆண்டுகளுக்குப் பிறகு 300 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு கும்பாபிஷேகம்...!

இன்று காலை மஹாபூர்ணஹூதி பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சித்தஞ்சி சிவகாளிசித்தர்பீடம் மோகனானந்த சுவாமிகள் தலைமையில் புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஓசூர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | 35 அடி உயர பத்துமலை முருகன் சிலை கொண்ட கோவிலில் கும்பாபிஷேகம்...