சீர்வரிசையுடன் விமர்சியாக நடந்த தேர்பவனி...

புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், பாளையக்காரரின் சீர்வரிசையுடன் ஆடம்பர தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

சீர்வரிசையுடன் விமர்சியாக நடந்த தேர்பவனி...

கடலூர் | விருத்தாசலம் அடுத்த கோனாங்குப்பம் கிராமத்தில், புனித பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக பாளையக்காரர்களான ஜமீன் குடும்பத்தை சேர்ந்த, வீரசேகர முத்துகிருஷ்ண பொன்னம்பல கணேஷ் கச்சராயர், குதிரையுடன் கூடிய சாரட் வண்டியில், ராஜ உடை அணிந்து கொண்டு,  பெரியநாயகி அன்னைக்கு சீர்வரிசை எடுத்து வந்தார்.

மேலும் படிக்க | பழனி கோவிலில் குடமுழுக்கு... தொடங்கிய முதல்கால வேள்விகள்...

பின்னர் தமிழ் கலாச்சாரப்படி பெரிய நாயகி அன்னைக்கு, புடவை அணிவித்த பின்பு வானவேடிக்கையுடன்,  மின்னொளியால், அலங்கரிக்கப்பட்ட, தேரினை, ஜமீன்தார்  தொடங்கி வைத்த, பின்பு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், வேண்டுதலை நிறைவேற்றியதற்கும்,  உப்புக்களை அன்னை மீது வீசி வேண்டிக் கொண்டனர். இந்நிகழ்வில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் உட்பட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுபுனித பெரியநாயகி அன்னையின் பேரருளை பெற்று சென்றனர்.

மேலும் படிக்க | தம்பதி சமேதராக தேர் ஊர்வலம் வந்த ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்...