கூலி வேலைக்குச் சென்ற இளைஞர்...! மின்சாரம் தாக்கி பலி..!

போச்சம்பள்ளி அருகே தேங்காய் பறிக்க கூலி வேலைக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கூலி வேலைக்குச் சென்ற இளைஞர்...! மின்சாரம் தாக்கி பலி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள கொடமாண்டபட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று காலை தென்னை மரத்தில் இருக்கும் தேங்காய் பறிக்கும் கூலி வேலைக்கு மாதம்பதி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27) என்ற இளைஞர் வந்துள்ளார். அவர் மரத்தில் ஏரி தேங்காய்களை பறித்துள்ளார். சுமார் ஐந்து மரங்களுக்கு மேல் தேங்காய் வெட்டிவிட்டு மேலும் உள்ள மரத்தில் தேங்காய் வெட்ட தென்னை மரத்தில் ஏறும் போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தை ஒட்டிச் சென்ற மின் கம்பி மீது காய்ந்த தென்ன மட்டை விழுந்துள்ளது. அந்த தென்னை மட்டை மணிகண்டன் மீது விழுந்துள்ளது இதில் மின்சாரம் இருந்ததால் மணிகண்டன் பாதி மரத்திலேயே உடல் கருகியவாறு பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராம மக்கள்  திரண்டு இறந்தவருக்கு இழப்பீடு வேண்டுமென்றும் மின் கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் இறந்தவர் உடலை எடுக்க அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்தங்கரை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொடம்மண்டபட்டி பிரிவு சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பர்கூர் டிஎஸ்பி மனோகரன், கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சங்கு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடற்கூறு ஆய்வுக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.