அம்மன் தலையில் சுற்றிய பாம்பு...! ஆச்சர்யத்துடன் வழிபட்ட மக்கள்...!

கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் பாம்பு சுற்றி இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்..!

அம்மன் தலையில் சுற்றிய பாம்பு...! ஆச்சர்யத்துடன் வழிபட்ட மக்கள்...!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சிவன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் தலையில் பாம்பு ஒன்று சுற்றி இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டும் புகைப்படம் எடுத்தும்  சென்றனர்.

இந்நிலையில் அம்மன் சிலையின் தலையில் சுற்றியுள்ள பாம்பை பிடிப்பதற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருமயம் தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக கோயிலுக்கு சென்று அந்தப் பாம்பை பிடித்து, அது சிறிய ரக மலைப்பாம்பு என்று  தெரிவித்து அதனை காட்டு பகுதியில் விட்டனர்.