போடப்பட்ட ஒரே நாளில் கையோடு உதிரும் சாலை...

அவசரமாக போடப்பட்ட சாலை, கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் நிலையில் போடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போடப்பட்ட ஒரே நாளில் கையோடு உதிரும் சாலை...

பொன்னேரியில் பல நாட்களாகவே சில பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. பல தரப்பட்ட மக்கள் இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பொன்னேரியில் இருந்து ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி செல்லும் சாலையில் புதிய சாலை போடப்பட்டது.

இந்த பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணிகளால், சாலை சேதமடைந்ததால் கடந்த ஓராண்டாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடும் அவதியடைந்த மக்கள் விரைந்து பாதாள சாக்கடை பணிகளை முடித்து சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இறுதியாக பொதுமக்களின் கோரிக்கை செவி சாய்த்த நகராட்சி  நிர்வாகம் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்று கடந்த சில நாட்களுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க | பைபாஸ் ஆலையில் ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து...

ஆனால் புதிதாக போடப்பட்ட தார் சாலை ஒரே நாளில் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி ஒரு அடிக்கு தார் சாலை உள்வாங்கியுள்ளது.

கடந்த ஓராண்டாக சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் என பெரும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது போடப்பட்டுள்ள சாலையும் ஒரே நாளில் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள் ஏற்கனவே ஓராண்டாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன்  சென்று வந்த நிலையில் தற்போது மீண்டும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் அவதியுற்று வருவதால் தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போடப்பட்ட ஒரே நாளில் சேதமடைந்த சாலையை மீண்டும் சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | அத்தி பழம் மாதிரி பிரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது....!!