சாதியம் இந்த அளவு மனிதனை யோசிக்க வைக்குமா? குடிநீர் தொட்டியில் மலம்கழித்த சம்பவம்...

சாதியம் இந்த அளவு மனிதனை யோசிக்க வைக்குமா? குடிநீர் தொட்டியில் மலம்கழித்த சம்பவம்...

புதுக்கோட்டை | அன்னவாசல் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்கு உடல்நிலை உபாதை  இருந்தது. இதனை அடுத்து புதுக்கோட்டை  அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடிநீர் பிரச்சினை காரணமாகவே குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கப்பட்டு பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியினை ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்த போது நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழிக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறைக்கும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கும் மனு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரேசன் அரசியை எம்.பிக்களும் எம். எல்.ஏக்களும் சாப்பிடுவார்களா?

இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று மருத்துவ முகாம் ஒன்றை அந்த பகுதியில் அமைத்து மக்களின் குறைகளை கேட்டு இருந்தார். அப்போது அந்த ஊர் பகுதியில் மக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

பின்னர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அந்த பகுதி மக்களை அழைத்துக் கொண்டு கோவிலின் கதவை உடனடியாக  திறக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டளையை விதித்தார்.

தற்போது இந்த மாவட்ட ஆட்சியரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற இழிவான செயல்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்ற வாக்குறுதியும் வைத்துள்ளார்

மேலும் படிக்க | பாஜக + விசிக எங்களுக்கு ஓகே தான்..! ஆனா இது மட்டும் தான் பிரச்னை - திருமாவளவன் ஓபன் டாக்