தந்தையிடம் இருந்து மகனை பறித்த மாமனார்...! உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு..!

தந்தையிடம் இருந்து மகனை பறித்த மாமனார்...! உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு..!

அபுதாபியில் குடும்பத்துடன் வசித்த போது மனைவி தற்கொலை செய்து கொண்டதால், தனது 5 வயது மகனை மாமனார் தர மறுக்கிறார். எனவே எனது மகனை  தன்னிடம் ஒப்படைக்க கோரி,  குழத்தையின் தந்தை தினேஷ்குமார் தொடர்ந்த  வழக்கில்,  5 வயது மகனை தந்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் தினேஷ்குமார் என்பவரது சார்பில் அவரது தந்தை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், தினேஷ்  குமாருக்கும் , அபிநயாவுக்கும்  கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம்  நடந்தது. அவர்களுக்கு 5 வயதுடைய ஹர்ஷித் குமார் என்ற மகன் உள்ளார். தினேஷ்  குமார், அபுதாபியில் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு தினேஷ் குமாரும், அவரது மனைவி அபிநயாவும் அபுதாபி சென்று வசித்தனர்.  குழந்தை ஹர்ஷித் குமார் , அபுதாபியில் படித்து வந்தார். மனைவி அபிநயா, உளவியல் பிரச்சினயால் பாதிக்கப்பட்டு வந்தார்.  இந்த தகவல் மனைவியின்  பெற்றோருக்கும்  நன்றாகத் தெரியும் என குறிப்பிடபட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம்,  அபிநயா அபுதாபியில்  வீட்டில்  தனியாக இருக்கும்  போது , கதவை மூடிவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அபுதாபி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  உடற்கூராய்வு சோதனையிலும் உடலில் காயங்கள் இல்லை.  என வந்துள்ளது.

மனுதாரரும்  தினேஷ் குமாரும், குழந்தையும்  மனைவி பிரேதத்துடன் ,  இந்தியாவில் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
அப்போது ,  மனைவி அபிநயாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் தினேஷ்குமாரை தாக்கி அவரது மகன் மற்றும் மகனின் பாஸ்போர்ட்டை பறித்து சென்றனர் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஹர்ஷித்குமாரை தினேஷ்குமாரிடம்  ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் ஜெயசந்திரன்,  சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,
மகனை,  தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க :  அமீரின் 'உயிர் தமிழுக்கு’ திரைப்படம்...! வெளியீட்டு உரிமையை பெற்றது யார்...?