பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்...ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்...ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது.   இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நள்ளிரவில் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் மாணவிகள் கடும் அவதியடைந்தனர். 

இதையும் படிக்க: அரியலூரில் எழுச்சி நடைப்பயணம்...ஏன் தெரியுமா?அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

இதனால் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு நிரந்தர தீர்வுகாண பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாபிசிங் மழைநீர் பாதிப்பு குறித்து பள்ளி வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.