செல்லப்  பிள்ளையாக வளர்க்கபட்ட காளை உயிரிழப்பு... மலரஞ்சலி செலுத்திய கிராம மக்கள்..

செல்லப்  பிள்ளையாக வளர்க்கபட்ட காளை உயிரிழப்பு... மலரஞ்சலி செலுத்திய கிராம மக்கள்..

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிகட்டு காளை உயிரிழந்ததால் கிராமமக்கள் சோகம். கிராம மக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மலரஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட முத்தாலம்மன் கோவில் காளை உடல்நல குறைவால் உயிரிழந்தது.இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உட்பட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்தது. 

காளை இறந்த தகவலறிந்து சுற்றுவட்டார கிராமமக்கள்,மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் பலரும் வந்து மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஊருக்குள் செல்ல பிள்ளையாக வலம் வந்த காளை இறந்ததால் கிராம பெண்கள் சோகத்துடன் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  

பின் அலங்கரிக்கப்பட்ட காளையை வாணவேடிக்கையுடன் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்தனர். தங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக  வளர்க்கபட்ட கிராமத்து கோவில் காளை திடீரென உயிரிழந்ததால் கிராமமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.