விமர்சையாக நடைபெற்ற புதிய தேரின் வெள்ளோட்டம்...

கொரநாட்டுக் கருப்பூரில் உள்ள அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் புதிய தேரின் வெள்ளோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

விமர்சையாக நடைபெற்ற புதிய தேரின் வெள்ளோட்டம்...

கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரில் பலவிநோத வழிபாட்டு முறைகள் கொண்ட பெட்டி காளியம்மன் ஸ்தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரதினத்தில் திருத்தேரோட்டம் கடந்த 1943ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருத்தேரின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் சிதிலமடைந்து, சக்கரங்கள் பழுதடைந்து தேரோட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறை அனுமதியுடன், புதிய திருத்தேர் செய்ய சென்னையை சேர்ந்த திருப்பணி செம்மல் மகாலெஷ்மி சுப்ரமணியன் ஏற்பாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய திருத்தேர் உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க | கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா...

சுமார் 24 டன் எடையில், 16 அடி உயரமும், 14 அடி அகலம் மற்றும் 16 அடி நீளத்தில் இப்புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 37 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த தேரின் வெள்ளோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று 26ம் தேதி சிறப்பு யாகசாலை பூஜை துவங்கப்பட்டு இன்று 27ம் தேதி காலை மூன்றாம் கால யாகசாலை பூர்ணா ஹூதியுடன் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து யாககலசங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று திருத்தேரில் ஸ்தாபித்து, புதிய தேருக்கு விசேஷ பூஜைகள் செய்து, தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க | 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்...

தொடர்ந்து புனித நீர் நிரப்பிய கடத்தை தேரில் ஸ்தாபித்த பிறகு தருமை ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீமகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் உபயதாரர்கள் ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை துவக்கிவைத்தனர்.

80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த புதிய திருத்தேரின் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

மேலும் படிக்க | விழுந்த மரம் எழுந்து நின்ற அதிசயம்... சாமியாக கும்பிடும் கிராம மக்கள்...