பள்ளி கட்டிடத்தை தெர்மாகோலில் வடிவமைத்து அசத்திய சிறுவன்..!

பள்ளி கட்டிடத்தை தெர்மாகோலில் வடிவமைத்து அசத்திய சிறுவன்..!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 226 பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பெரும்பாலை பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா மகன் அர்ஜுனன் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த  மாணவர் நீண்ட நாட்களாக அந்தப் பள்ளியை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்து தெர்மாகோலில் அந்தப் பள்ளி கட்டிடத்தை  போல் அச்சு அசலாக வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

மேலும்  பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நான்காம் வகுப்பு மாணவன் வடிமமைத்த பள்ளி கட்டிடத்தை பார்த்து வியந்தனர். அதோடு பள்ளி முதல்வர் இளம்பரிதி, தாளாளர் சத்யநாராயணன் பள்ளி மாணவனை பாராட்டினர். அந்த மாணவருக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பள்ளி ஆசிரியர்கள் ஊக்கப் படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.