பண்டிகையை முன்னிட்டு தொகுதி மக்களுக்கு புத்தாடைகள் வழங்கிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்

பண்டிகையை முன்னிட்டு தொகுதி மக்களுக்கு புத்தாடைகள் வழங்கிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முதியோர், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு விலையில்லா வேஷ்டி - சேலையை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்த்து துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்பு மேடையில்  பேசிய அவர், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் மற்றும் தீபாவளி திருநாளில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தீபாவளிக்கு வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்வும், பொங்கலுக்கு பொங்கல் பரிசு கொடுக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வந்தது.  

ஆனால் கடந்த 7 ஆண்டு காலமாக விதவைகள், கைம்பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என ஓய்வூதியம் பெறுபவர்கள் மன உளைச்சலாக இருந்தார்கள், ஆண் வாரிசு இருந்தால் ஓய்வூதியம் கிடையாது என்று அதனை நிறுத்தி வைத்திருந்தார்கள். அதனை மீண்டும் தமிழக அரசு தற்பொழுது வழங்கி வருகிறது என்றார். 

இதுவரையும் 1,84,281 பேருக்கு  உதவித்தொகை தமிழக அரசு வழங்கியுள்ளது . இந்த ஆண்டு புதிதாக இந்த திட்டத்தின் மூலம் 67,137 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்றார். மக்களை தேடும் மருத்துவம் திட்டத்தின் மூலமாக தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறோம் கடந்த ஐந்து நாட்களாக காலை 5 மணிக்கு எல்லாம் இந்த திட்டத்தின் மூலமாக வீடு தேடி சென்று உதவி செய்து வருவதாக கூறினார். 

மேலும் படிக்க: ஒளிக் கொடுத்தவருக்காக இருளில் மூழ்கிய நகரம்..!

மேலும், அரசுடைய திட்டம் மக்களுக்கு தெரிய வேண்டும், பல திட்டங்கள் இருப்பது தெரியாமல் உள்ளது. பல திட்டங்கள் எதற்கு என்று தெரியாமல் உதவி தொகை வருகிறது என்று அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கின்றனர். எந்தத் திட்டத்தின் மூலமாக யார் பயன்பெறுவார்கள் என்பதை அறிந்து அந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார். 

மேலும், 50 வயதிற்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு என்று திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் மூலமாக பயன்பெற இருக்கும் பெண்கள் தங்களது பெயர்களை சேர்த்து இந்த திட்டத்தில் பயன்பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.