நாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை பட்டாகத்தியால் அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்...

நாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை பட்டாகத்தியால் அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்...

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் பூட்டிய பேக்கரி கடையை பட்டா கத்தியுடன் வந்து அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள்-பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை செயல்பட்டு விடுகிறது.  தற்போது கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கடை மூடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று மாலை கையில் பட்டா கத்தியுடன் பேக்கரி கடை வாசலில் நுழைந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டாகத்தியுடன் வந்து பேக்கரி கடை முன் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும், டேபிள், சேர்களை தூக்கிவீசியும், அந்த வளாகத்திலுள்ள அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியும் வாசலில் நின்ற இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து சம்பவம் அறிந்த  வாடிப்பட்டி போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அராஜகத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் அசோக் என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர் அதிமுகவினருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கி தப்பியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது திமுக பிரமுகர் அசோக் உள்ளிட்ட 3 பேரை கைது செத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பூட்டிய பேக்கரி கடையை பட்டாகத்தியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய திமுக பிரமுகரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.