மாமரத்தில் உள்ள பூக்கள் கருகுவதால் வேதனை...

பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் கருகும் மா பூக்கள் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
மாமரத்தில் உள்ள பூக்கள் கருகுவதால் வேதனை...
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி | தமிழகத்தில் மா உற்பத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் காரகுப்பம் முப்பதவாடி கோட்டூர் ஜின்ஜம்பட்டி ஆம்பள்ளி ஜெகதேவி மல்லப்பாடிசுற்றுவட்டார பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இங்கு சுவை மிகுந்த ரகங்களான அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனபள்ளி, நீளம், செந்தூரா, மல்கோவா, சீறி சர்க்கரை, குட்டி கல் நீளம் போன்ற மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து உள்ளதால் மா மரங்களில் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 42,436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது நவம்பர் மாதத்தில் உருவான 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு தொடர் மழையால் ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியது.

மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளன 25 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி உள்ளதால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமரங்களில் பூக்கள் பூக்கள் துவங்கியுள்ளது.

கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக பாதிக்குப் பாதிபூக்கள் கருது மேலும் இதற்கு முன்பு இல்லாத அளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மா மரங்களில் உள்ள பூக்கள் கருகியதால் கவலை அடைந்த விவசாயிகள் மாம்பூக்களை காப்பாற்ற மருந்து அடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்த கிராமத்தைச் சார்ந்த விவசாயிகள் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருமாறு விவசாயிகள் இந்த ஆண்டு கைகொடுக்கும் என்ற  நிலையில் கடந்த மாதம் தொடர் மழை மற்றும் தற்போது கடும் பணிப்பொழிவாள் பூக்கள் கருகத் துவங்கி உள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மருந்துகள் அனைத்தும் விலை உயர்த்தப்பட்டுள்ளன ஆள் கூலி உயர்ந்தது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை பெரும் சிரமத்திற்கு இடையே மாமரங்களை காப்பாற்றி வருகிறோம் என்று கவலை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com