அரசு மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்... காரணம் என்ன?!!

அரசு மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்... காரணம் என்ன?!!

சென்னை வடபழனி திருநகரில் அரசு பிற்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது.  இந்த விடுதியில் 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.  இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகவே மாணவர்களுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

வாந்தி மயக்கம்:

நேற்று இரவு நான்கு மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையும் மூன்று பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மூன்று மாணவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரணம் என்ன?:

தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் விடுதியை வந்து பார்வையிட்டனர்.   ஃபுட் பாய்சன் காரணமா? அல்லது குடிநீர் சுகாதாரமற்ற இருக்கிறதா? என ஆய்வு நடத்தினர்.

சிறப்பு மருத்துவ முகாம்:

மாணவர்களின் நலன் கருதி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தற்போது விடுதியில் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:    திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்... ஆலோசனை வழங்குகிறார் கனிமொழி கருணாநிதி !!!