ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்புறம் தொங்கிச்செல்லும் மாணவர்கள்...!

ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்புறம் தொங்கிச்செல்லும் மாணவர்கள்...!

புதுக்கோட்டையில் இருந்து கொடும்பாளுர் வழியாக தினசரி மணப்பாறைக்கு தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று காலையும் பேருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. மணப்பாறையை அடுத்த புதுகாலணி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது படியில் தொங்கிக்கொண்டும்,  பேருந்தின் பின் பகுதியில் உள்ள ஏணியை பிடித்த படியும் சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் சென்று கொண்டிருந்தனர். 

இதை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்களின் வசதிக்காக  காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க :  "பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசுவது தரம் தாழ்ந்த செயல்" அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!