ராணுவ வீரர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ராணுவ வீரர்கள்...

ஒய்வு பெற்ற ராணுவ வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட நிகழ்வை கண்டித்து தென்காசியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவ வீரர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ராணுவ வீரர்கள்...

கிருஷ்ணகிரி | ஒய்வு பெற்ற இராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்செயலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதே போன்று தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் சங்கம் மற்றும் பா.ஜ.க. இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் சங்கத்தின் இராமச்சந்திரன் தலைமை வகித்தார். பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

மேலும் படிக்க | மேலும் ஒரு புதிய மதுபான கடை... எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா...

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏய்வு பெற்ற இராணுவ வீரர் பிரபுவை படுகொலை செய்த திமுக கவுன்சிலர் மீது அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பிரபுவின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற கரும்பு விவசாயிகள்...குண்டுகட்டாக தூக்கிய போலீசார்!