
ஆவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பட்டு சோதனை சாவடியில் ஆவடி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை போலீசார் இருசக்கர வாகனம்,கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக (PORTER) வாடகை லோடு வாகனம் வந்தது.
அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது லோடு வாகன டிரைவர் மற்றும் அதில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் லோடு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் படிக்க | கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்த அதிகாரிகள்...
இதில் 10 க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.அதனை வெளியே எடுத்து பார்த்த போது சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட குட்கா,ஹான்ஸ் கூல்லீப், பொட்டலம் அகியவை இருந்தது. மேலும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க தனியார் சரக்கு வாகன ஆப் மூலம் வாகனத்தை புக் செய்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அம்பத்துருக்கு குட்கா பொருட்கள் கொண்டு வந்தது
விசாரணையில் தெரிய வந்தது.அவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்து ஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்த 34 வயதான குலாம் மொய்தீன், திருநெல்வேலியை சேர்ந்த 25 வயதான லோடு வண்டி ஓட்டுநர் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்தி வந்த 1.4 லட்சம் மதிப்புள்ள 1 டன் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | ரேஷன் அரிசியை கடத்திய வடமாநிலத்தவர்களை கைது செய்த அதிகாரிகள்...