ரூ.10,54,445 மற்றும் 36.5 கிலோ தங்கம் காணிக்கை...

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

ரூ.10,54,445 மற்றும் 36.5 கிலோ தங்கம் காணிக்கை...

கரூர் | குளித்தலை அருகே உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை 6 மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று மலையடிவாரம், நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள வைர பெருமாள் சன்னிதானம் மற்றும் விநாயகர் சன்னிதானம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்கள் திறக்கப்பட்டு என்னும் பணி நடைபெற்றது.

மேலும் படிக்க | 1.9 கோடி ரொக்கம், 1.6 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை...

இந்த உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை  கரூர் தான்தோன்றி மலை உதவி ஆணையர் நந்தகுமார் முன்னிலையில் திறக்கப்பட்டு அய்யர்மலை  டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி என் எஸ் எஸ் மாணவ, மாணவியர்கள் 60 பேர் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பணியில் ஆய்வாளர் கனிகுமார், கோவில் செயல் அலுவலர் அனிதா, கல்லூரி என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்கள்  பெரியசாமி,  புவனேஸ்வரி மற்றும் கோவில்  பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ வெள்ளி கவசம் நன்கொடை...

இதில் பக்தர்கள் ரூபாய் 10 லட்சத்து 54 ஆயிரத்து 445 ம்,  தங்கமாக 36.500 கிராம், 163.800 கிராம் வெள்ளி ஆகிய காணிக்கை எண்ணப்பட்டன.

எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையை இந்தியன் வங்கி மேலாளர் திவ்யா மற்றும் காசாளர் ரம்யா ஆகியோர் காணிக்கை எண்ணும் இடத்திற்கு வந்து தொகையை பெற்றுக்கொண்டனர். இவை கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | வரலாற்றில் முதல்முறையாக வெளியே எண்ணப்பட உள்ள திருப்பதி உண்டியல் காணிக்கை...