அனுமதியின்றி நடத்தப்படும் ரேக்ளா பந்தயம்...! அச்சத்தில் மக்கள்..!

அதிகாலை நேரத்தில் அனுமதியின்றி நடக்கும் ரேக்ளா பந்தயம் ...!

அனுமதியின்றி நடத்தப்படும் ரேக்ளா பந்தயம்...! அச்சத்தில் மக்கள்..!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் அனுமதி இன்றி ரேக்ளா பந்தயம் நடத்தி வருகின்றனர். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான பேரூர், ஆலாந்துறை , நரசீபுரம் மற்றும் நகரப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொள்ள தொண்டாமுத்தூரில் ஒரு பகுதியில் ஒன்று கூடி பந்தயம் நடத்தி வருகின்றனர். இந்த பந்தயம் அனுமதி இன்றி காவல்துறைக்கு தெரியாமல் நடத்தப்படுகிறது. இதனால் பல பிரச்சனைகள் எழுவது வழக்கம். 

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தேவராயபுரம் பகுதியில் இருந்து நரசீபுரம் வரையில் ரேக்ளா பந்தயம் நடைப்பெற்றது. அப்போது இரு சக்கர வாகனம் மற்றும் நாக்கு சக்கர வாகனத்தில் சாலையில் அதிக ஒலி எழுப்பிய படி சென்று, காலை 5 மணி வரை பந்தயம் நடத்தி உள்ளனர். அதனால் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கும் ரேக்ளா பந்தயத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்னரே பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.