ராஜராஜ சோழனின் சதய விழா நாளை தொடக்கம்...! மின்விளக்குகளால் ஜொலிக்கும் பெரிய கோவில்...!

ராஜராஜ சோழனின் சதய விழா நாளை தொடக்கம்...! மின்விளக்குகளால் ஜொலிக்கும் பெரிய கோவில்...!

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நாளை தொடங்க உள்ளது

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் சதய விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக முக்கிய நிகழ்வான ராஜராஜனுக்கு மாலை அணிவிப்பு மற்றும் பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு என ஒரு நாள் மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டு ராஜராஜனின் 1037-ம் ஆண்டு சதய விழா 2 ஆம் தேதி (நாளை) மற்றும் 3 ஆம் தேதி அரசு சார்பில் இரண்டு நாள் விழாவாக  கொண்டாடப்பட உள்ளது. 

நாளை காலை மங்கள இசையுடன் தொடங்கி அடுத்து ஓதுவார்கள் தேவாரப்பாடல்களை கொண்டு திருமுறை பாடுவார்கள். முக்கிய நிகழ்வாக சதய நட்சத்திரமான 3 ஆம் தேதி இராஜராஜ சோழன் உருவ சிலைக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் 
மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

மேலும் ராஜராஜன் பெருமையை பறைசாற்றும் வகையில் கருத்தரங்கம், 
கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, தேவார இன்னிசை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.