தம்பதி சமேதராக கண்ணாடி பள்ளியறையில் காட்சியளித்த ராஜகோபாலசுவாமி...

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பள்ளியறையில் ருக்மணி, சத்தியபாமா சமேதராக கல்யாண திருக்கோலத்தில்பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

தம்பதி சமேதராக கண்ணாடி பள்ளியறையில் காட்சியளித்த ராஜகோபாலசுவாமி...

திருவாரூர் | மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயிலில் பெருமாள் சன்னதியின் எதிர்புறம் கண்ணாடி பள்ளியறை அமைந்திருக்கிறது. இதில் வருடத்தில் ஒரு சில உற்சவங்களின் போது ராஜகோபாலசுவாமி ருக்மணி , சத்தியபாமா சமேதராக எழுந்தருளி கல்யாண திருக்கோலத்தில் அருள்பாலிப்பார்.

இந்த கண்ணாடி பள்ளியறையில் கிருஷ்ணா அவதாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் படங்களாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குணி உற்சவத்தையொட்டி இன்று ராஜகோபால சுவாமி கண்ணாடி பள்ளியறையில் கல்யாண திருக்கோலத்தில்  அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து கண்ணாடிகளில் பிரதிபலித்த சுவாமிகளை கண்டு மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனி கோவிலில் சிறப்பு பூஜை...