விலை மதிப்பற்ற கோபுர கலசம் கண்டெடுப்பு...

கந்தர்வகோட்டையில் ஈஸ்வரர் திருக்கோயில் அருகே விலை மதிப்பற்ற கோபுர கலசம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விலை மதிப்பற்ற கோபுர கலசம் கண்டெடுப்பு...

புதுக்கோட்டை | கந்தர்வகோட்டையில் அமைந்துள்ள அமராவதி உடனுறை ஆபத்சகாயயேஸ்வரர் கோயில் அருகே பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இந்த பிடாரி அம்மன் கோயிலில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு பிடாரியம்மன் கோபுர கலசம் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த கதிரவன் விஜி தவச்செல்வன் சித்திரைவேல் ஆகியோர் கபடி விளையாட சென்று கொண்டிருக்கும் பொழுது வயலில் துணியில் கட்டியவாறு மூட்டையாக கிடப்பதை பார்த்த அந்த இளைஞர்கள் அதனைத் திறந்து பார்த்துள்ளனர். அது விலைமதிப்பற்ற கோபுர கலசம் என்று தெரியவந்தது.

மேலும் படிக்க | மணப்பாறை பொன்னர் சங்கர் கோவில் மாசி விழா - வசதி செய்துதரக்கோரி முற்றுகை

உடனடியாக தகவல் அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலசத்தை மீட்டனர். மேலும், அதனைக் கண்டெடுத்த இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் வட்டாட்சியர் ராஜேஸ்வரிடம் ஒப்படைத்தார்.

இந்த கோபுர கலசத்தை பரிசோதனை செய்யும் பொழுது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பிடாரி அம்மன் கோயில் கலசம் என்று தெரிய வந்தது. இதனை அடுத்து கந்தர்வகோட்டை வட்டாட்சியர் இராஜேஸ்வரி இந்து சமய அறநிலைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின், கோபுர கலசத்தை கந்தர்வகோட்டை குருக்கள் பாலா தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கோபுர கலசத்தை கண்டெடுத்த அப்பகுதி இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க | ஏரியில் படகு கவிழ்ந்து ஆறு பேர் பலி...