உயிர்பலி வாங்க துடிக்கும் பள்ளிக்கட்டிடம்... மரத்தடியில் பாடம் பயிலும் அவலம்...

பேருக்கு வகுப்பறைகள் என்ற பெயரில் மரத்தடியில் கல்வி கற்கும் வகையில், கறம்பக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

உயிர்பலி வாங்க துடிக்கும் பள்ளிக்கட்டிடம்... மரத்தடியில் பாடம் பயிலும் அவலம்...

புதுக்கோட்டை : கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியன் விடுதி கிராமத்தில் ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக்கூட கட்டிடம் கஜா புயலின் போது சேதமைடந்த நிலையில் அதிகாரிகள் கண் துடைப்புக்கு மட்டுமே சீரமைப்பு பணியை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க | புதைத்த குழந்தை தலை காணவில்லை... கிரகணத்தில் கடத்தப்பட்டதாக தகவல்...

இதனால் கிராம மக்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்து வீட்டிலேயே வைத்து கொள்வதால் பலர் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

கட்டிடத்தின் நிலைமை இப்படி என்றால் ஆசிரியர்களின் நிலைமையோ அதைவிட மோசம். அத்தி பூத்தாற்போல் தான் பள்ளிக்கு வருகின்றனர் ஆசிரியர்கள். இதனால் அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை கடன்வாங்கி பாடம் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க | ராஜேந்திர சோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு...! கண்டுபிடித்த வரலாற்று ஆய்வுக் குழு..!

ஆபத்தை ஏற்படுத்தும் கட்டிடம், போதிய ஆசிரியர்கள்  இல்லாத வகுப்பறை  இப்படி ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி குறித்து பல முறை புகார்கள் கொடுக்கும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்பதே அப்பகுதி மக்களின் வேதனை குரலாக உள்ளது.