நம்பி போய்டாதீங்க.. இது பறவை குரல்... மனிதன் போல மிமிக்ரி செய்யும் பறவைகள்...

நீலகிரி மாவட்டத்தில் பறவைகளின் உள்ளூர் வரிசையில் மலபார் விஸ்லிங் திரஸ் மற்றும் நீலகிரி லாபிங் திரஷ் பறவைகள் அதிக அளவு காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம்பி போய்டாதீங்க.. இது பறவை குரல்... மனிதன் போல மிமிக்ரி செய்யும் பறவைகள்...

நீலகிரி | மலபார் விசிலிங் திரிஸ் பறவை தொட்டபெட்டா, கோடநாடு, பர்லியார் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இதேபோல் நீலகிரி லாபிங் திரஷ் என்ற பறவையும் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பறவைகளின் உள்ளூருக்கு வர துவங்கியுள்ளது. குளிர்காலம் மற்றும் பணி துவங்கும் நேரத்தில் பறவைகள் உள்ளூர் வர துவங்குகின்றன.

சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் வெப்பம், குளிர் காரணமாக பறவைகள் இடம் பெயற்கின்றன. அதில் தற்போது மலபார்  விசிலிங் திரஸ் மற்றும் நீலகிரி லாப்பிங் திரஷ்  பறவை அதிகளவு  இடம் பெயர துவங்கியுள்ளது.

மேலும் படிக்க | உதகையில் பூத்து குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்...திரண்டு வரும் சுற்றுலா பயணிகள்...

மலபார் விசிலிங் டிரஸ் பறவை மனிதர்களைப் போலவே விசில் அடிக்கும்.

அதேபோல் நீலகிரி லாபிங் கிரஷ் என்ற பறவை மனிதர்கள் சிரிப்பது போலவே இது வனப்பகுதியில் சிரிக்கும்
இந்த இரண்டு பறவைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கண்காணித்து ஆவணப்படுத்தி அதன் அழகிகளை மற்றும் வாழ்வியல் முறையை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது 

இது குறித்து பறவைகளை ஆவணப்படுத்தும் புகைப்பட கலைஞர் தெரிவிக்கையில் பறவைகள் வாழ்வியல் முறை மற்றும் இடர்ப்பெயர்வு காரணமாக தான் வனப்பகுதியில் பெருகும் மற்றும் காடுகளை வளர்க்கும் மிகச்சிறந்த பணியை பறவைகள் தான் செய்கின்றன. பறவைகள் இல்லை என்றால் இந்த பூவுலகம் இருக்காது.

மேலும் படிக்க | தேனீக்கள் துறத்த அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்...

மலபார் விஸ்லிங் திரஷ் மற்றும் நீலகிரி லாபிங் திரஷ் பறவைகளை ஆவணப்படுத்துவதில் மிக்க இந்த சிரமங்கள் இருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்து செல்வதில் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்றைய மாணவர் சமுதாயம் செல்போன் மற்றும் இணைய விளையாட்டுகள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

பறவைகளை படம் பிடிப்பதை காணவும் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த இரண்டு பறவைகளும் பர்லியார், தொட்டபெட்டா மற்றும் கோடநாடு ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் தேடுதலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | நடுங்கும் குளிரிலும் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்...பனிமூட்டத்தால் ஏமாற்றம்!!!

இந்த பறவை அடர்ந்த ஆற்றங்கரை காடுகளிலும் இருண்ட மரத்தின் அடிகளிலும் பொதுவாக பாறை நீரோடைகள் மற்றும் காடுகள் உள்ள ஆறுகளின் விளிம்புகளில் அதிக அளவு காணப்படுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 220  மீட்டர் உயரத்தில் உள்ள மலையடி ஓரத்தில் அதிக அளவு காணப்படுகிறது.

இந்த பறவை கருநீல நிற கழுத்தைக் கொண்டும் நீல நிற இறகுகளைக் கொண்டும் தலைமேல் வீ போன்ற வடிவை கொண்டு மிக அழகாக காணப்படும். இந்த பறவை காலை நேரங்களில் விசில் அடிப்பது ரம்யமாக காணப்படும். இந்த விசிலின் சத்தத்தை கேட்பதற்காகவே ஏராளமான பொதுமக்கள் இந்த பறவையை காண செல்வது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம்...! சுற்றுலாப் பயணிகள் அச்சம்...!