வைகுண்ட ஏகாதசிக்கு தயாராகும் ஒரு லட்சம் லட்டுகள்...

சொர்க்க வாசல் திறப்புக்காக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு தயாராகும் ஒரு லட்சம் லட்டுகள்...

தருமபுரி | கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி உடனமர் ஸ்ரீ பரவாசுதேவ கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவை ஒட்டி பரமபதம் வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த பெருவிழாவில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முழுவதும் உள்ள பழமையான பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம், ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அன்றைய தினம் பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பெருமாளை வணங்கும் பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதமிருந்து பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை வணிங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க | பழமுதிர்சோலையில் 2 கோடி ரூபாய்க்கு புது கதவுகள்...

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாள்வைகுண்ட ஏகாதசி நாளாக கொண்டாடப்படுகிறது.அதன்படி வருகின்ற 02.01.2023 அன்று தருமபுரி கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி உடனமர் ஸ்ரீ பரவாசுதேவ கோவிலில்., வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பெருமாள் கோவிலில் வரும் ஜனவரி 2 திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி  பெருமாள் கோவிலில் வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாத குழு சார்பில் 33ம் ஆண்டாக லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி கோயில் மண்டபத்தில் தயாரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

மேலும் படிக்க | ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக லட்சக்கணக்கில் தயாராகும் லட்டுக்கள்...