ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று வட மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை...

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று வட மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம் வந்தநல்லூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 70 ஆயிரம் ரூபாய் இழந்ததால் வட மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள |  மாயமான கல்லூரி மாணவிகள்!!என்ன ஆனது என்று கண்கலங்கும் பெற்றோர்கள்...
சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் என்பவரது மனைவி பந்தனா மஜ்கி ஆன்லைன் சூதாட்டத்தில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் கரிவலம் வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட வடமாநில  பெண்ணுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனதாக கூறப்படுகிறது. அவரது கணவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ராஜபாளையம் அருகே உள்ள  மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆனவுடன் மனைவியும் இங்கு அழைத்து வந்து அதே மில்லில் இருவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்ததால் அடிக்கடி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பெண்ணுடைய உறவினர் ( சகோதரர்) இந்த பெண்ணுடைய வங்கி கணக்குக்கு அவ்வப்போது பணம் அனுப்பி வைத்துள்ளார். அந்தப் பணம் முழுவதும் சூதாட்டத்தில் இழந்ததன் காரணமாக கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த பெண் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணமாகி 3 ஆண்டுகளான நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து RDO விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வருகிறது. தற்போது இந்த பெண்ணின் உடல் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில்.பிணவறையில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.