தேசிய முந்திரி தின விழா...! அரசுக்கு கோரிக்கை வைத்த முந்திரி விவசாயிகள்..!

தேசிய முந்திரி தின விழா...! அரசுக்கு கோரிக்கை வைத்த முந்திரி விவசாயிகள்..!

தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் சார்பில் முந்திரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தேசிய முந்திரி தின விழா கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கலந்துகொண்டு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். 

அப்போது முந்திரி ஏற்றுமதியாளர் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் முந்திரி கன்றுகளை பயிரிட அரசுக்கு கோரிக்கை வைத்துக் கொள்வதாகவும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அதிகரித்துள்ளதால் முந்திரி தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் எனவே மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் பொருளாளர் செல்வமணி உட்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் முந்திரி விவசாயிகள் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : 218 - வது கோவை டே.....!!! வாழ்த்துகளை உற்சாகமாக வெளிப்படுத்திய மாணவர்கள்...!


விபத்தில் தூக்கி வீசப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பலி...

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தென்காசி | சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி(60) என்பவர் சங்கரன்கோவில் இருந்து மலையாங்குளம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க் நோக்கி இரு சக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது தச்சநல்லூர் பகுதி அழகனேரியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்று விட்டு இரண்டு கார்களில் குடும்பத்தாருடன் வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.

மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து...  அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

அதில் இருசக்கர வாகனத்தில் வந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி தூக்கி வீசப்பட்டதில் முன்னாள் ராணுவ வீரர் கணபதி சம்பவ இடத்தில் பலியானார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நகர காவல்துறையினர் அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னாள் ராணுவ வீரர் கணபதி மீது கார் மோதி தூக்கி வீசப்படும் நெஞ்சை பதபத வைக்க கூடிய சிசிடிவி கட்சியானது  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ருவாண்டா நாட்டு இளைஞர் கைது...

தனியார் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து...

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கோவை | கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் போத்தனூர் அடுத்த மேட்டூர் சாய்பாபா கோயில் அருகே உள்ள காலி இடத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் காப்பர் கம்பிகளை தனியாக பிரிக்கும் குடோன் வைத்துள்ளார்.

இந்நிலையில் இரவு குடோனில் ஒயரில் உள்ள காப்பர் கம்பிகளை தனியாக பிரித்து எடுக்க  தீ பற்ற வைத்ததாக தெரிகிறது. அந்த தீ அருகே உள்ள பிளாஸ்டிக் பொருட்களிலும், மரப்பொருட்களிலும் எதிர்பாராத விதமாக பரவியதில் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது.

மேலும் படிக்க | கார் விபத்தில் 3 பேர் பலி... 5பேர் படுகாயம்...

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.  விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் இருந்து நாசமானது.

மேலும் தீ விபத்து ஏற்படும்போது உள்ளே யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் புகை வெளியேறியது. 

இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ருவாண்டா நாட்டு இளைஞர் கைது...

கடலூர் | சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் போலீசார் பணி ஈடுபட்டிருந்தனர் அப்போது சித்தலப்பாடி டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த வெளிநாட்டு இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் விற்பனைக்காக 80 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், அவர் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த கட்டேரா அமி டி ஜெகோவா(29) என்பதும், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை முதுகலை பட்டப்படிப்பு படித்ததும் தெரிய வந்தது.

தற்போது புதுச்சேரியில் உள்ள குயிலாகுப்பத்தில் தங்கி சிதம்பரத்திற்கு பைக்கில் வந்து கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. அதோடு மட்டுமல்லாது இவரது விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கி இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து...அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

திருச்சி | மாத்தூர் அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், மூன்று பேர் பலியாகிய நிலையில், 5 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில்  மகிஷா ஸ்ரீ (12),சுமதி (45)டிரைவர் கதிர் (47) பேர்  பலியாகினர். இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 5 க்கும் மேற்பட்டோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடத்திய அதிகாரிகள்...

மேலும் இறந்தவர்களின் 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   இந்த சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து...அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

தவறான தகவலை பரப்பிய பீகாரை சேர்ந்த நபர் கைது...

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பீகாரைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான சமூக விரோதிகள் சிலர் வதந்தி பரப்பி வந்தனர்.

அதில் Headlines Bihar என்ற முகநூல் பக்கத்தில் திருப்பூரில் சுமார் பீஹாரிகள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், பீஹார் மாநிலத்தவரை தமிழர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் பீஹார் மாநிலத்தவர்களை திருப்பூர் இரயில் நிலையத்திற்கு செல்லவிடாமல் தடுப்பதாகவும் வீடியோ ஒன்றை பதிவு செய்தனர்.

மேலும் இதை வைத்து, இருபிரிவினரிடையே பிரிவினையை தூண்ட முயற்சித்தும், இந்திய ஒருமைபாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது திருப்பூர் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் 5 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள்...

துணைக்காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சித்ராதேவி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த 10 தேதி பாட்னா சென்று, அங்கு பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் Headlines Bihar, என்ற சமூக ஊடக அலுவலகம் சென்று இப்பதிவு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரப்பிய நபர் உபேந்திரா ஷானி (32) என்பது தெரிய வந்தது மேலும் அவரது மொபைல் எண் கிடைத்தது. மொபைல் எண்ணை கொண்டு அந்த நபர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். 

தொடர்ந்து மொபைல் சிக்னல் காட்டிய பீகார் ரத்வாரா ரஞ்சீத் கூல் தங்க சேமிப்பகம் பகுதிக்குச் சென்ற போலீசார், அங்கு மறைந்திருந்த உபேந்திர ஷானியை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பீகாரில் இருந்து உபேந்திர ஷானியை திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து...அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!