சென்னை: வானிலை ஆய்வு மையம் சொன்னது போலையே நடந்துடுச்சே.. அதுவும் காலையில இருந்தே..!

சென்னை: வானிலை ஆய்வு மையம் சொன்னது போலையே நடந்துடுச்சே.. அதுவும் காலையில இருந்தே..!

தொடர் மழை:

சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. 

புறநகர் பகுதிகளிலும் மழை:

அதேபோல் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், போரூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் சிரமம்:

பரவலான மழையால் ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்புவோரும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.