ஓடாது ஜீவா... சரி செய்த ஆட்டோ தானாக ஓடிய ஆட்டோவால் பரபரப்பு...

கோவில் முன்பக்கம் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ திடீரென தலைகுப்புற கவிழ்ந்து, மீட்டப் பிறகு, கட்டுப்பாட்டை இழந்து அலுவலகத்திற்குள் சென்று மோதி நின்றதால் பரபரப்பு நிலவியது.

ஓடாது ஜீவா... சரி செய்த ஆட்டோ தானாக ஓடிய ஆட்டோவால் பரபரப்பு...

கன்னியாகுமரி | புதுக்கடை அருகே கூட்டாலுமூடு கோவில் உள்ளது இந்த கோவிலின் முன்பக்கம் உள்ள சாலை வழியாக தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன் ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை நிமிர்த்தபோது என்ஜின் செயல்பாட்டில் இருந்ததால் ஆட்டோ அதிவேகமாக அருகில் இருந்த பேரூராட்சி அலுவலகத்திற்குள் சென்று சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த பெண்மணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் மது போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | கனரக லாரியின் சிசிடிவி காட்சிகள் வைரல்...