ஏராளமானோர் கண்டு களித்த மஞ்சுவிரட்டு போட்டி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமானோர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

ஏராளமானோர் கண்டு களித்த மஞ்சுவிரட்டு போட்டி...

புதுக்கோட்டை | கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர் நாயக்கர் பட்டி ஸ்ரீ.முனியான்டவர் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

காளைகள் மற்றும்  மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக ஸ்ரீ முனியாண்டவர் கோவில் காலை அவிழ்க்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க | மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...!

இதற்க்காக அமைக்கப்பட்ட களத்தில் மதுரை சிவகங்கை தின்டுக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 காளைகளும் 100 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வடமாடு மஞ்சுவிரட்டு 10 சுற்றுக்கலாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றிலும் 10 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

களத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் கயிருடன் சீறிப்பாய்ந்து காளையர்களுக்கு போக்கு காட்டி திமிலை சிலிற்தப்படி சீறிப்பாய்ந்து ஓடிவருகின்றன. இதை காளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்று வருகின்றனர். சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்.

மேலும் படிக்க | பின்னால் இருந்த பாஜக.... உண்மையை கூறிய ஷிண்டே!!!

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் காளையர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வடமாடு மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டை  கந்தர்வகோட்டை மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு களித்து வருகின்றனர்.

ஏதேனும் விபத்துக்கள் நேரிட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரியையொட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டியாஞ்சலி விழா...!