ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மகா கும்பாபிஷேகம்...

ஸ்ரீபசவேஸ்வர திருக்கோவில் நடைப்பெற்ற மஹாகும்பாபிஷேக விழாவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மகா கும்பாபிஷேகம்...

கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபசவேஸ்ர திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சியாக மூன்று நாட்கள் யாக காலப் பூஜைகளுடன் நடைப்பெற்று வந்தது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை முதல் கணபதி ஹோமம், வாஸ்த்து ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பகலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகப் ஹோமங்களும் நடைப்பெற்றது.

மேலும் படிக்க | 16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி கோயில் குடமுழுக்கு.....முன்பதிவு ஆரம்பம்.....

பின்னர் மேளத்தாளங்களுடன்  புன்னிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரினை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீபசவேஸ்வரசுவாமி திருக்கோவிலின் விமானகலசங்களுக்கு மங்கள வாத்தியங்கள் முளங்க சிவாச்சாரியர்கள் புனித நீரினை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து பத்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் தெளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கோவில் வீற்றுருக்கும் ஸ்ரீபசவேஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், கற்பூர தீபாதரனைகளுடன் சிறப்பு அலங்கார தீபாதரனை  நடைப்பெற்றது. பின், சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீபசவேஸ்வரரை ஏராராளமான பக்தர்கள் தரிசனம் செய்து  வழிப்பட்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபசவேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர், பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அறசுவை உணவுகளும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் பிரமோற்சவம்...