புகழ்பெற்ற செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா...

புகழ்பெற்ற செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி | கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி கிராமத்தில் புகழ்பெற்ற செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.

இந்நிலையில் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து மேள தளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் மூலவர் விமான கோபுரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையெடுத்து, சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com