நவீன முறையில் லாட்டரி விற்பனை...! நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!

நவீன முறையில் லாட்டரி விற்பனை...! நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் ஆன்லைன் மூலம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை புதுவித டெக்னாலஜியுடன் லாட்டரி விற்பனையை நடந்து வருகிறது. அந்தந்த மாநிலத்தில் உள்ள லாட்டரி நம்பர்களை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டு ஒரு பேப்பரில் லாட்டரி வாங்கும் நபருக்கு விருப்பமான நம்பரை எழுதிக் கொடுத்து அதையே லாட்டரி டிக்கெட் போல் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு லாட்டரி ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

மறுநாள் முடிவுகளை அச்சடித்து அதனை லாட்டரி வாங்கிய வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விடுகின்றனர். லாட்டரியில் பரிசு விழுந்த நபருக்கு பரிசு வந்த தகவலும் வாட்ஸ்அப் மூலமே தெரிவிக்கப்படுகிறது. இப்படியாக மறைமுகமாக நடக்கும் ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் கூலி தொழிலாளர்களை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் லாட்டரி மோகத்தில் இறங்கி உள்ளது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆன்லைன் மூலம் நடக்கும் லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com