லாரி பட்டறை உரிமையாளர் மீது போதை ஆசாமிகள் தாக்குதல்...

லாரி பட்டறை உரிமையாளர் மீது போதை ஆசாமிகள் தாக்குதல்...

புத்தாண்டு கொண்டாட்ட போதையில் லாரி, பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடி சேதப்படுத்தி, கடை உரிமையாளரை கம்பியால் தாக்கிய வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர்
Published on

சிவகங்கை | தேவகோட்டை அருகே உறுதிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ். இவர் சாத்திக்கோட்டை பகுதியில் லாரி பட்டறை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரிடம் வெட்டிவயலை சேர்ந்த சுரேஷ் என்பவர் லாரி பட்டறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு 11 மணி அளவில் தளக்காவயல் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் அஜய்(25), ஜெயராமன் (25) இருவரும் லாரி பட்டறைக்கு போதையில் வந்துள்ளனர். அப்போது உரிமையாளர் சுரேஷ் மற்றும் உதவியாளர் சுரேஷ் இருவரும் உணவருந்தி கொண்டிருந்தபோது போதையில் இருந்த வாலிபர்கள் இன்னும் சிறிது நேரத்தில் புத்தாண்டு வரப்போகுது ஏன் வேலை செய்கிறீர்கள் எனக்கேட்டு தகராறில ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே அஜய்,ஜெயராமன் ஆகிய இருவரும் லாரி பட்டறையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து இரு சுரேஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்,மேலும் பட்டறையில் இருந்த டிப்பர் லாரி, மினி லாரி, பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட வாகனத்தின் ஒரு லட்சம் மதிப்புள்ள கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி இருவரும் தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த இரு சுரேஷும் தேவகோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜய் மற்றும் ஜெயராமனை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com