கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஆள் கடத்தல்..3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!!!

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஆள் கடத்தல்..3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!!!
Published on
Updated on
1 min read

ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியில் மருத்துவமனை வைப்பதாக சுந்தரமூர்த்தி என்பவர் முதலீடு கோரி விளம்பரம் செய்திருந்தார்.இதனை கண்ட பல்லாவரத்தை சேர்ந்த வைஷாலி என்பவர் 7 லட்சம் முதலீடு செய்ததாக தெரிகிறது. எதிர்பார்த்த அளவிற்கு லாபமோ, முன்பணமோ கிடைக்காததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.


நேற்று இரவு திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் ஒரு டீக்கடையில் வைத்து சுந்தரமூர்த்தி அங்கு வரவைத்து வைஷாலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாரதிதாசன், சிவா தேவகுமார் ஆகிய நான்கு பேரும் பணத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.வாக்குவாதம் முற்றியதை அடுத்து சுந்தரமூர்த்தியை கையால் தாக்கி தாங்கள் வந்த காரில் கடத்திச் சென்றதாக சுந்தரமூர்த்தியின் மகள் விஷ்ணு பிரியா
திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான தனிப்படையினர் மூன்றே மணி நேரத்தில் சுந்தரமூர்த்தியை மீட்டு நான்கு பேரை கைது செய்து திருமுல்லைவாயில் அழைத்து வந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com