கனமழையால் 200 ஏக்கர் பயிர்கள் நாசம்... விவசாயிகள் வேதனை...

தீவிரமடைந்த வட கிழக்கு பருவ மழையால் ராயல் ஏரி நிரம்பி 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெல் பயிர்கள் நாசமடைந்துள்ளது.
கனமழையால் 200 ஏக்கர் பயிர்கள் நாசம்... விவசாயிகள் வேதனை...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக நேற்று முன் தினம் சுமார் 15 மணி நேரம் கன மழை கொட்டிய நிலையில் நேற்றும் காலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.

குறிப்பாக மாவட்டத்தில் சூளகிரியில் 97 மில்லி மீட்டர் மழையும், ஓசூரில் 62 மில்லி மீட்டரும், கிருஷ்ணகிரியில் 49 மில்லி மீட்டரும், பெனுகொண்டாபுரத்தில் 40 மில்லி மீட்டர் மழையும் அதிகபட்சமாக பதிவானது. மாவட்டத்தில் மொத்தமாக 616.40 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அடுத்த அஞ்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோடிகுப்பம் பகுதியில் உள்ள ராயல் ஏரி நிரம்பி தண்ணி செல்ல வழி இல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது. இதனால் இரு தினங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான் நெல் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி நாசமானது.

இது குறித்து வேதனை தெரிவித்து உள்ள விவசாயிகள் குடிமராமத்து பணியில் ராயல் ஏரி முழுமையாக தூர் வாராததால் தற்போது ஏரி நிரம்பி தங்களது விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததாகவும் மழையால் பாதிக்கப்பட்ட தங்களது நெல் பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com