எஸ்.பி உத்தரவுகளுக்கு இவ்வளவு தான் மரியாதையா?

உத்தரவுகளை மீறி சட்ட விரோதமாக மதுபானங்களை விற்ற 16 பெண்கள் உள்ளிட்ட 72 பேர் கரூரில் கைதாகியுள்ளனர். சரியாக கவனிக்காத காவல்துறை மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி உத்தரவுகளுக்கு இவ்வளவு தான் மரியாதையா?

காந்தி ஜெயந்தி நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு கட்டாய விடுமுறை என விதிக்கப்பட்டது. அதையும் மீறி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தலின் பேரில் போலீஸார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட சொல்லி உத்தரவுகள் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | காந்தி ஜெயந்தி: உலக அமைதியை வலியுறுத்தி மிதிவண்டி பேரணி!

இதனையடுத்து கரூர் மாவட்டம் முழுவதும் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் சட்டவிரோதமாக மதுவிற்ற 16 பெண்மணி உள்பட்ட மொத்தம் 72 நபர்களை அதிரடியாக கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 523 மதுபான பாட்டில்களையும், அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இருப்பினும் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் கள்ளத்தனமாக மதுவிற்பனை படுஜோராக விற்கப்பட்டு வருகின்றதும், ஹோட்டல்களிலும் தங்கு தடையின்றி சட்டவிரோத மதுவிற்பனை செய்யப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | புதுச்சேரியிலிருந்து பெட்டி பெட்டியாக கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள்...! போலீசாரிடம் சிக்கிய சம்பவம்..!