உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில் வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்பி வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில் சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கி வரும் நிலையில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
5-வது சுற்றில் 390 காளைகள் களமிறக்கம்; 125 வீரர்கள் பங்கேற்பு:
5ஆம் சுற்றில் 390 காளைகள் களமிறக்கபட்ட நிலையில் 125 மாடுபிடி வீரர்கள் மாடுகளை அடக்கி வருகின்றனர். இதுவரை 22 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் 13பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 சுற்றின் இறுதியில் 23 மாடுகளை பிடித்து விஜய் என்பவர் முதலிடத்தில் உள்ள நிலையில் கார்த்திக் என்பவர் 2-வது இடத்தில் இருந்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.