ஏ.டி.எம் இயந்திரத்தையே உடைத்து திருடிய ஜகஜால கில்லாடி...

வாணியம்பாடி அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தையே உடைத்து திருடிய ஜகஜால கில்லாடி...

திருப்பத்தூர் | வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்மநபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார்,

அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களை பார்த்து கொள்ளளயில் ஈடுப்பட்ட மர்ம நபர் கடப்பாரையை அங்கேயே விட்டு தப்பியோடியுள்ளார். இதனை தொடர்ந்து ஆலங்காயம் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | பெரம்பூர் நகைக்கடை கொள்ளை... நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!