மதுபானம் என்ன அப்படி ஒரு அத்தியாவசிய பொருளா? - நீதிபதிகள் கேள்வி...

அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்ற கோரிய வழக்கு அமர்வுக்கு வந்தது.
மதுபானம் என்ன அப்படி ஒரு அத்தியாவசிய பொருளா? - நீதிபதிகள் கேள்வி...
Published on
Updated on
1 min read

விருதுநகர் | அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபானக் கடை உள்ளதால் அங்கிருக்கும் மதுபான கடைகளை அகற்றக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானதாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், "விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் பட்டியல் சமுகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். P.வாகைகுளம் கிராமத்தை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன இங்கு பல்வேறு வகுப்பினை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலையூர் கிராம நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த மதுபான கடை: 11910, P.வாகைகுளம் கிராமத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. சிறுவர்கள், பெண்கள் சென்று வரக்கூடிய பாதையாகவும் உள்ள இந்த பகுதியில், வெவ்வேறு சமூகத்தினரிடையே மோதல், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவை நடக்க வாய்ப்பிருப்பதாக கிராமத்தினர் பயம் வெளிப்படுத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மதுபான கடைகளை அகற்றக் கோரி பொது மக்கள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிசு செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வந்த் அபோது, டாஸ்மாக் தரப்பில் இருந்து, “உரிய அனுமதி பெற்றேமதுபான கடைகள நடத்தப்படுவதாகவும், 20 கி.மீ தொலைவிற்கு வெறும் 1 கடை மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? என கேள்வி எழுப்பி வழக்கு குறித்து உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் டாஸ்மார்க் மேலாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com