முகலாய படையெடுப்பில் இடிக்கப்பட்ட கோவிலில் குடமுழுக்கு...

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வர சுவாமி் ஆலயத்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடந்ததில், ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
முகலாய படையெடுப்பில் இடிக்கப்பட்ட கோவிலில் குடமுழுக்கு...
Published on
Updated on
1 min read

திருவாரூர் | தியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபய கோயிலான திருவாரூர் மாவட்டம் பழையவலம் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயத்தை முகலாய படையெடுப்பின் போது இடிக்கப்பட்டது.

இந்த ஆலயம் சிதிலமடைந்த நிலையில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இந்த குடமுழுக்கு விழா கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று 8 ஆம் கால யாக காலை பூஜை பூர்ணா ஹூதி தீபாரதனை நடைப்பெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மல்லாரி இசையுடன் ஆலயவலம் வந்து அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி், அம்பாள், முருகள், வினாயகர் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு புனித  நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இதில் ஆயர்க்கணக்கானோர் கலந்துக்கொண்டு தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com