அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த குடிசைகள்...

அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த குடிசைகள்...

இரண்டு குடிசை வீடுகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எறிந்தது. இளைஞர்கள் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Published on

திருப்பத்தூர் | திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள சிவராஜ்பேட்டை பகுதியில் பெயிண்டர் தொழில் செய்து வரும் நிலையில் அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்ற போது அந்த அருகில் இருந்த கூரை வீட்டின் மீது விழுந்து இரண்டு கூரை வீடுகளும் தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை எடுத்து உடனடியாக தீயை அணைத்ததால் அருகில் இருந்த கூரை வீடுகள் தீ பிடிக்காமல் தடுத்து பெரும் விபத்து ஏற்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு உள்ளனர்.

இதனால் இரண்டு வீடுகளில் உடமைகள் எறிந்து சேதமான நிலையில் திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com