விலை உயர்ந்த வாகனங்களை குறிவைக்கும் கும்பல்...

வடசென்னையில் வாகன சோதனையில் தொடர்ந்து விலை உயர்ந்த திருட்டு இருசக்கர வாகனங்கள் பிடிப்பட்டு வருகிறது.
விலை உயர்ந்த வாகனங்களை குறிவைக்கும் கும்பல்...
Published on
Updated on
1 min read

சென்னை | புது வண்ணாரப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் கீரை தோட்டம் அருகே உள்ள சௌந்தரபாண்டியன் சுப்பம்மாள்  பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ரீனரோதி என்ற மாணவி சாலையில் நடந்து செல்லும் போது விலை உயர்ந்த ஆர்15 வாகனத்தில் இரு இளைஞர்கள் வேகமாக அந்த வழியாக வந்துள்ளனர் . 

அப்போது சிறுமியின் மீது மோதி மூக்கு பகுதியில் இடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளனர் ரத்த காயத்து உடன் அங்கிருந்த சிறுமியை போக்குவரத்து போலீசார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

மேலும் அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சத்தியநாதன் மற்றும் தலைமை காவலர்கள் சுதாகர், பிரேம் ஆகியோர் வண்டியை பிடித்துள்ளனர் வண்டியை ஓட்டி வந்த இளைஞர் தப்பி ஓடி உள்ளார். பின்னாடி உட்கார்ந்து வந்த 17 வயதுடைய சிறுவனை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் விசாரணையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சத்தியநாதன் பிடித்த கொடுத்த ஆர் என் 5 வாகனம் திருவான்மியூர் ஜே 6 காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் திருடு போயி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மீது அங்குள்ள குற்றப்பிரிவு போலீசார் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தப்பியோடிய இளைஞரை  போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தொடர்ந்து வட சென்னை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ராயபுரத்தில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது விழுப்புரத்தில் திருடப்பட்ட வாகனம் பிடிபட்டு ஆணையர் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் வட சென்னை முழுவதும் விலை உயர்ந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்ணும் கருத்தாக கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com