தமிழ்நாட்டில் முதல்முறையாக ஹீமோகுளோபின் குறைபாட்டை கண்டறிய முகாம்!

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஹீமோகுளோபின் குறைபாட்டை கண்டறிய முகாம்!

தமிழகத்தில் முதன் முறையாக கொல்லிமலையில் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் எல்லகிராய்பட்டி கிராமத்தில் தமிழ்நாட்டின் முதன்முறையாக ஹீமோகுளோபினோபதி, தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட நோய்களை கண்டறியும் பரிசோதனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதற்கு முன்னதாக அப்பகுதி மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஹீமோகுளோபினோபதி பரிசோதனை செய்து கொண்டால் ரத்தம் சர்ந்த நோய்களை கண்டறிவது மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், மலைவாழ் மக்கள் நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்வதால் ரத்தம் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அதற்காக ரத்தம் தொடர்பான நோய்களை கண்டறியும் வகையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்து 1 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகளை கண்டறிய முடியும் எனவும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனையடுத்து,  இன்று தொடங்கப்பட்ட பரிசோதனை முகாமில் ஆண்கள், பெண்கள் என முதற்கட்டமாக 10 மலைவாழ் மக்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்து உடனடியாக 1 நிமிடத்தில்  முடிவுகளை தெரிவித்தது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!